உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சதுர்த்தி: பலவகை சிலைகள் தயாராகின்றன

விநாயகர் சதுர்த்தி: பலவகை சிலைகள் தயாராகின்றன

''கணபதி என்றிட கலங்கும் வல்வினைகணபதி என்றிட காலனும் கைதொழும்கணபதி என்றிட கருமம் ஆதலால்கணபதி என்றிட கவலை தீருமே''அதிகாலை, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரல் ஒலிக்கும். விநாயகரை நோக்கி மனம் நினைக்கும். வீதியோர மரத்தடி விநாயகரை வணங்காவிடில் அன்றைய நாள் பொழுது பக்தர்களுக்குத் துவங்குவதில்லை. வரும் செப்., 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இப்போதிருந்தே பக்தர்கள் தயாராகிவருகின்றனர். ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் அன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், விசர்ஜனம் செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையின் பாகங்கள் திருப்பூர் வஞ்சிபாளையம் பிரிவு மற்றும் அலகுமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவை ஒட்டப்பட்டு தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. சிலைகளுக்கு 'வாட்டர் கலர்' பூசப்பட்டு வந்தது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின், இம்மாத கடைசியில் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இம்முறை, மயில் வாகன விநாயகர், முருக விநாயகர், லிங்க விநாயகர், கஜமுக விநாயகர், வில் ஏந்திய விநாயகர், யானை வாகனம், கருட, சிம்மவாகனம் என, பல வகை விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சிலைகள், 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடிகள் என, ஐந்து வகையில் தயாராகி உள்ளது.ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.---விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில் ஹிந்து முன்னணி சார்பில் பலவகை விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.ஆஞ்சநேயரைத் தோளில் சுமந்து செல்லும் விநாயகர்ஜல்லிக்கட்டு விநாயகர்யானை தலை மீது நிற்கும் விநாயகர்நந்தி, மயில், சிங்க வாகனத்தில் விநாயகர்தயாராகி வரும் பல்வேறு வகை சிலைகள்.

ஒவ்வொரு சிலைக்கும் 10 மரக்கன்றுகள் நட முடிவு

ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி 7 முதல், 15ம் தேதி வரை என, ஒன்பது நாள் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு விநாயகருக்கும், பத்து மரக்கன்றுகளை நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். ஒவ்வொரு நாளும், இளைஞர் தினம், அன்னையர் தினம் என, ஒவ்வொரு தலைப்பின் கீழ் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு நடக்கிறது.விசர்ஜன ஊர்வலம், 9ம் தேதி அவிநாசி, தாராபுரம், பல்லடம், உடுமலை; 10ம் தேதி திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி; 11ம் தேதி கோவை; 15ம் தேதி, சென்னை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமாக நடக்கிறது. திருப்பூர், கோவை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முருகன், அவிநாசியில் பா.ஜ., மூத்த தலைவர் ராஜா என, பலர் பங்கேற்க உள்ளனர்.- காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ