உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி: விவசாயிகள் அதிர்ச்சி

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி: விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை:உடுமலை அருகே, மர்ம விலங்கு கடித்து, குதறியதில், 5 ஆடுகள் பலியானது.உடுமலை அருகே, சின்னவீரம்பட்டியை சேர்ந்த விவசாயி அருண். நேற்று முன்தினம் இரவு, ஆடு, மாடுகளை பட்டியில் கட்டி வைத்து விட்டு உறங்கச்சென்றார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, ஆட்டுப்பட்டியில் புகுந்த மர்ம விலங்கு, 5 ஆடுகளை, கடித்து குதறி உள்ளது; ஒரு ஆட்டை இழுத்துச்சென்றுள்ளது.காலையில் வந்து பார்த்த போது, ஆடுகள், ஆங்காங்கு, கடிபட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, போலீசார், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடுமலை வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். சிறுத்தை போன்ற வன விலங்கா என கண்டறிய, தோட்டத்து சாளை மற்றும் விலங்கு நடமாடிய பகுதிகளில், கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேரமா பதிவை பொறுத்தே, எந்த விலங்கு கடித்தது தெரிய வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, சின்னவீரம்பட்டி, தாந்தோணி, மைவாடி என பல்வேறு கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட ஆடுகள், வேட்டை நாய் கூட்டங்களால், கடித்து குதறப்பட்டு, தொடர்ந்து பலியாகி வந்தது.கால்நடைகள் மட்டுமின்றி, இரவு நேரங்களில் மக்களுக்கும் ஆபத்து உள்ளது, என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 4 மாதத்திற்கு பின் மீண்டும், சின்ன வீரம்பட்டி பகுதியில் ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ