உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குதிரைகளுக்கான ஆரோக்கியம்; ஊட்டச்சத்து கருத்தரங்கு

குதிரைகளுக்கான ஆரோக்கியம்; ஊட்டச்சத்து கருத்தரங்கு

உடுமலை : உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 'குதிரைகளுக்கான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து,' குறித்த தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், இக்கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார்.மருத்துவ கல்லுாரி பேராசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.பொள்ளாச்சி 'எக்ஸ்போவேன்' குழுமத்தின் தலைவர் மகேந்திரன், கருத்தரங்கு இதழை வெளியிட்டு, குதிரை வளர்ப்பில் தனது அனுபவங்கள் குறித்து பேசினார்.குதிரை வளர்ப்பு நிபுணர் தர்மலிங்கம், சென்னை கால்நடை ஆலோசகர் குமரன் உள்ளிட்டோர் பேசினர்.குதிரைகள் நலன், ஊட்டச்சத்து, இனப்பெருக்க மேலாண்மை, குதிரைகளில் ஏற்படும் நோய்களும் அதை தவிர்க்கும் மேலாண்மைஉள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், நிபுணர்கள் பேசினர்.கல்லுாரி பேராசிரியர் சிவசங்கர் நன்றி தெரிவித்தார். இக்கருத்தரங்கு கால்நடைமருத்துவர்கள் மற்றும் குதிரை உரிமையாளர்கள் என, இரு தொழில்நுட்ப அமர்வுகளாக நடத்தப்பட்டது.கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 141 கால்நடை மருத்துவர்கள் மற்றும் குதிரை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை