உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹீமோபிலியா சிகிச்சை இனி அலைய வேண்டாம்

ஹீமோபிலியா சிகிச்சை இனி அலைய வேண்டாம்

இனி, திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலேயே, நான்கு முதல், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஹீமோபிலியா தொடர் சிகிச்சை, ஆலோசனை பெற முடியும்.மரபணு வழியாக ஏற்படும் ஒருவித குறைபாடு, ஹீமோபிலியா. இக்குறைபாடு உள்ளவர்களுக்கு, ரத்தம் உறையும் தன்மை இல்லாததால், சிறிய அளவில் அடிபட்டாலும் ரத்தம் தொடர்ந்து வெளியேறும்.உடனடியாக உரிய சிகிச்சை பெறாவிட்டால், உயிருக்கே ஆபத்தாகி விடும். இந்த சிகிச்சை வசதிகள் திருப்பூர் மாவட்டத்தில் இல்லாத நிலையில், கோவைக்கும், ஈரோட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.இதை எளிதாக்க அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், திருப்பூரில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான 'புரோபிலாக்சிஸ்' சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை முறையில், இனி, திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலேயே, நான்கு முதல், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஹீமோபிலியா தொடர் சிகிச்சை, ஆலோசனை பெற முடியும். தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் கோவைக்கு, ஈரோட்டுக்கும் பயணிக்க வேண்டியதில்லை.பயம் எதற்கு?ஹீமோபிலியா பாதிப்புள்ள குழந்தைகள், உடல் ஊனமடையும் பாதிப்பை தவிர்க்க, 'புரோபிலாக்சிஸ்' சிகிச்சை, தடுப்பூசி வாரந்தோறும் அவசியம். இந்த வசதி இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் இல்லை. மருத்துவத்துறை அறிவுறுத்தலின் படி, ஹீமோபிலியா பாதித்த குழந்தைகள் வசதிக்காக துவங்கப்பட்டுள்ளது. ஒரு டாக்டர், இரண்டு செவிலியர் இப்பணியில் இருப்பர். தேவையான தகவல், சந்தேகங்களை ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்கள் இவர்களிடம் அறிந்து கொள்ளலாம். பயப்படத் தேவையில்லை.- திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி