உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் அதிரடி

பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் அதிரடி

திருப்பூர்;திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் உள்ள விதிமுறைகளுக்குப் புறம்பான ஆக்கிரமிப்புகள் அகற்றவும், ஒப்பந்த விதி மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.திருப்பூர், காமராஜ் ரோட்டில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மத்திய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இங்குள்ள வணிக வளாகத்தில், 90 கடைகள் உள்ளன. இதில், பிரதான வளாகத்தில் உள்ள உணவகத்தை வாஹிதா என்பவர் குத்தகை எடுத்துள்ளார். மாதம் 1.25 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.வணிக வளாகத்தில் உள்ள பிற கடைகளில் விதிமுறைகளுக்குப் புறம்பாக அடுப்பு பயன்படுத்தப்படுவது, உணவு வகைகள் விற்பனை செய்வது, கடைகளின் முன்புறம் உள்ள இடத்தை உள் வாடகைக்கு விடுவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் உள்ளது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார்.தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவு விவரம்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில், விதிகளுக்கு புறம்பாக அடுப்பு பயன் படுத்துதல், கடைகளுக்கு முன் உள்ள இடத்தில் கடைகள் நடத்த அனுமதித்து, லாபம் ஈட்டுதல், உணவு பொருள் விற்பனை செய்தல் போன்றவை நடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுத்து அவற்றை அகற்ற வேண்டும். தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு அலுவலர் நியமித்து மீண்டும் இது தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை