உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது

மாட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது

திருப்பூர்;முந்தைய வாரத்தை விட, நடப்பு வாரம் திருப்பூர் மாட்டுச்சந்தைக்கான மாடு வரத்து குறைந்தது.திருப்பூர், அமராவதிபாளையத்தில், திங்கள் தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. கடந்த வாரம் நடந்த சந்தைக்கு, 960 க்கும் அதிகமாக மாடுகள் வந்த நிலையில், நேற்று, 947 ஆக மாடு வரத்து குறைந்தது.நேற்றைய சந்தையில் கன்றுக் குட்டிகள், 2,500 முதல், 3,500 ரூபாய்க்கும், மாடுகள், 29 ஆயிரம் முதல், 32 ஆயிரம், காளைகள், 27 ஆயிரம் முதல், 32 ஆயிரம் வரை விற்பனையானது. எருது வரத்து குறைவாக இருந்த போதும், 34 ஆயிரம் வரை விலை போனது.முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில், மாடு வரத்து குறைந்தாலும், கால்நடைகள் வாங்க கேரள வியாபாரிகள் குறைவாக வந்ததால், நேற்று விற்பனை களை கட்டவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை