உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி பகுதி மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

அவிநாசி பகுதி மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர்:அவிநாசி சுற்றுப்பகுதி மாம்பழ குடோன்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் மாம்பழம் விற்பனை குறித்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அவிநாசி, கருவலுார் வாரச்சந்தை, குடோன், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை ஆய்வு செய்தனர். மாம்பழங்களை பழுக்கவைக்க செயற்கை ரசாயனங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.ஆய்வு குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:அவிநாசி சுற்றுப்பகுதி மாம்பழ குடோன், கடைகளில் நடத்திய ஆய்வில், விதிமீறல்கள் கண்டறியப்படவில்லை. பழச்சாறு தயாரிப்புக்கும் தரமான குடிநீரையே பயன்படுத்துகின்றனர். மாம்பழங்களை இயற்கையாக மட்டுமே பழுக்கவைக்கவேண்டும். செயற்கை ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்க கூடாது.இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டால், உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக, தோல் அலர்ஜி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும்.ரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல், வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்; உள்பகுதி காயாக இருக்கும். பழச்சாறு அளவு குறைவாக இருக்கும்.பழத்தின் மணமும் குறைவாக இருக்கும். மாம்பழம், பழச்சாறு விற்பனை குறித்து, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள், 94440 42322 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு புகார்கள் அளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி