உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாதுகாப்புக்கு பதிக்கப்பட்ட இரும்பு தகடுகள் மாயம்?

பாதுகாப்புக்கு பதிக்கப்பட்ட இரும்பு தகடுகள் மாயம்?

பல்லடம்;பல்லடத்தில், பாதுகாப்பு கருதி பதிக்கப்பட்ட இரும்பு தகடுகள் மாயமாகி வரும் நிலையில், பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்படுகிறாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குளம் குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் மற்றும் கல் குவாரிகள், ஆபத்தான பள்ளங்கள் உள்ள இடங்களில், நெடுஞ்சாலை துறை, ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றின் சார்பில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீப நாட்களாக, சமூக விரோதிகள் சிலர், இது போன்ற இரும்பு தகடுகளை கழற்றி எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பனிக்கம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:விபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைக்கை கருதியும், நீர்நிலைகளில், குப்பைகள் கழிவுகள் கொட்டாமல் இருக்கவும் வேண்டி நீர் நிலையை சுற்றிலும் இரும்பு தகடுகள் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு, பல்லடம் செட்டிபாளையம் ரோடு, ரங்கசமுத்திரம் குட்டையை சுற்றிலும் இரும்பு தகடுகள் சமீபத்தில்தான் பொருத்தப்பட்டன. இதற்குள், யாரோ சிலர், இரும்பு தகடுகள் சிறிது சிறிதாக கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். எஞ்சியுள்ள தகடுகளையாவது காப்பாற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்பு தகடுகள் களவாடி செல்லும் நபர்களை கண்டறிந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை