உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்வில் ஜெயம் காட்டிய ஜெயந்தி பப்ளிக் பள்ளி 

தேர்வில் ஜெயம் காட்டிய ஜெயந்தி பப்ளிக் பள்ளி 

திருப்பூர், : திருப்பூர், அருள்புரம், ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவி லக்சிதா, 487 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், செயலாளர் நீலாவதி சம்பத்குமார், பள்ளி முதல்வர் மலர்விழி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.மாணவ செல்வங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புக்களை சென்னை டி.ஏ.வி., பள்ளிக் குழுமத்துடன் இணைந்து உருவாக்கித் தருகிறோம் என்று பள்ளித்தாளாளர் கிருஷ்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !