உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் சாதனையுடன்  கிட்ஸ் கிளப் பள்ளி கலக்கல்

தொடர் சாதனையுடன்  கிட்ஸ் கிளப் பள்ளி கலக்கல்

திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வில், தொடர்ச்சியான சாதனைகளுடன், கிட்ஸ் கிளப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.இப்பள்ளி மாணவி ஹரிணி, இரண்டு பாடத்தில், சதமடித்து, 592 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். மாணவி லிதன்யா, 2 பாடத்தில் சதமடித்து, 591 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளார். மாணவி சுஜிதா, அறிவியல் பாடப்பிரிவில், இரண்டு பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண்களுடன், 590 மதிப்பெண் பெற்று, மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.சக்தி சிவராகவ், நான்கு பாடங்களிலும், லேனா தமிழ்வாணன், கவிநயா, தியா ஆகியோர் தலா மூன்று பாடங்களிலும், மாணவர் துசர் இரண்டு பாடங்களிலும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிரெஞ்சு பாடத்தில் மூன்று பேர்; கணிதத்தில், நான்கு பேர்; இயற்பியலில் மூன்று பேர்; கம்ப்யூட்டர் அறிவியலில் 25 பேர்; பொருளியலில், இரண்டு பேர்; வணிகவியலில் ஐந்து பேர்; கணக்குப்பதிவியலில் ஏழு பேர் என, 49 பேர், 100க்கு 100 மதிப்பெண்ணுடன் சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் சாதித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களை, தலைவர் மோகன்கார்த்திக், தாளாளர் விநோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர்ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை