உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

உடுமலை:கோட்டமங்கலம் மாரியம்மன் கோவிலில், இன்று கும்பாபிேஷகம் கோலாகலமாக நடக்கிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.உடுமலை அருகே கோட்டமங்கலத்தில், ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழா கடந்த 9ம் தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. மறுநாள் கணபதி ேஹாமம், தன பூஜை, கோ பூஜை, முதற்கால யாக பூஜை நடந்தது.நேற்று காலையில் இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடக்கிறது.காலை, 7:10 மணிக்கு முதலில், கோபுர விமானம், பரிவாரங்களுக்கும், 7:20க்கு மூலவர் ஸ்ரீ மாரியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து தச தரிசனம், மஹாபிேஷகம், மஹாஅலங்காரம், நடைபெறுகிறது.மாலை. 4:30 மணிக்கு சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதி உலாவும் நடக்கிறது.பின்னர், நாளை முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், கோட்டமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர், கோட்டமங்கலம் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை