உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சலவை, ஆடை நிறுவனங்கள் மானியத்தில் அமைக்கலாம்

சலவை, ஆடை நிறுவனங்கள் மானியத்தில் அமைக்கலாம்

திருப்பூர் : அரசு மானியத்துடன், சலவையகம் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் துவங்க சீர்மரபின தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:சீர்மரபினர், நவீன சலவையகம் அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய நிதியுதவி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. சலவையகம் அமைக்க தேவையான நவீன இயந்திரங்கள், மூலப்பொருட்கள் உள்பட முதலீடுகளுக்கு தேவையான நிதியில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, பத்து பேர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்கவேண்டும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.இதே விதிமுறைகள் மற்றும் மானியத்துடன், சீர் மரபின தொழில்முனைவோர், ஆடை உற்பத்தி நிறுவன அமைப்பதற்கான திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. இவ்விரு திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்புவோர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை