| ADDED : ஏப் 02, 2024 01:08 AM
திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று கணித தேர்வு நடந்தது.தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து:தங்க அர்ச்சனா: ஆசிரியர் குறிப்பெடுத்து கொடுத்த, முக்கிய வினாக்களே அதிகமாக வந்திருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு, மூன்று மதிப்பெண்ணில் எளிமையான கேள்விகளே இருந்தது. தொடர்ந்து கேட்கப்படும் வினாக்கள் வந்திருந்தது. நல்ல மதிப்பெண் பெற முடியும்.ராதிகா: அனைத்து கேள்விகளும் படித்தாக இருந்ததால், வினாத்தாளை பார்த்ததும் அளவற்ற மகிழ்ச்சி. முழுமையாக விடை அளித்துள்ளேன். நிச்சயம், நல்ல மதிப்பெண் பெற முடியும்.பிரீத்தீஸ்வரன்: ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் கட்டாய வினாக்கள் கூட படித்ததே வந்திருந்தது. திருப்புதல் தேர்வுகள், முந்தைய வினாத்தாள்களில் இடம் பெற்ற அதே கேள்விகள் அப்படியே வந்திருந்தால், எளிதில் விடையளிக்க முடிந்தது.ஜெயசூர்யா: ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் கிரியேட்டிவ் டைப்பில் இரண்டு கேள்விகள் கேட்கப்படும். அவை புத்தகத்துக்குள் இருந்து வந்திருந்தால், 'பார்முலா' டைப்பில் எளிதில் விடை யளிக்கும் வகையில் இருந்தது. கட்டாய வினாவுக்கு சிரமமின்றி விடையளிக்க முடிந்தது.திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துமகேஸ்வரி கூறியதாவது:எதிர்பார்த்த அனைத்து கேள்விகளும் இடம் பெற்றுள்ளது. யோசித்து விடையளிக்கும் வகையில் கேட்கப்படும் வினாக்கள் கூட, எளிதில் விடையெழுதும் வகையில் அமைந்திருந்தது.ஐந்து ஆண்டுகளுக்கு பின், தற்போது, கணித வினாத்தாள் மிக எளிமையாக வந்துள்ளதால், தேர்ச்சி சதவீதமும், 'சென்டம்' எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும்.