உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்ச்சி சதவீதத்தில் மெட்ரிக் பள்ளிகள் டாப்

தேர்ச்சி சதவீதத்தில் மெட்ரிக் பள்ளிகள் டாப்

திருப்பூர்:பிளஸ் 2 தேர்வு முடிவில் தனியார் பள்ளியில் பயின்றவர்களில், ஐந்து பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.அதிக பட்சமாக அரசு பள்ளிகளில் பயின்றவர்களில், 222 மாணவர், 103 மாணவியர் என, 325 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாநகராட்சி பள்ளி அளவில், 51 மாணவர், 68 மாணவியர் என, 119 பேரும், உதவி பெறும் பள்ளி அளவில், 66 மாணவர், 54 மாணவியர் என, 120 பேர் தேர்ச்சி பெறவில்லை. மெட்ரிக் பள்ளி அளவில், 28 மாணவர், 10 மாணவியர் என, 38 பேர் தேர்ச்சியடையவில்லை.அதிக பட்சமாக மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, 4,879 மாணவர், 4,674 மாணவியர் என மொத்தம், 9,553 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 9,515 பேர் தேர்ச்சி பெற்றனர். 38 பேர் தேர்ச்சி பெறவில்லை. குறைந்த பட்சமாக தனியார் பள்ளிகளில், 777 பேர் தேர்வெழுதினர்; இவர்களில் ஐந்து பேர் மட்டுமே தேர்ச்சியடைவில்லை. தேர்ச்சி சதவீதத்தில், 99.60 மெட்ரிக் பள்ளிகள் முதலிடமும், மாநகராட்சி பள்ளிகள், 95.03 சதவீதம் பெற்று கடைசி இடமும் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை