உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுகலான பாலம்; போக்குவரத்தில் சிக்கல்

குறுகலான பாலம்; போக்குவரத்தில் சிக்கல்

உடுமலை : கிராம இணைப்பு ரோட்டிலுள்ள கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என, கண்ணமநாயக்கனுார் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை நகரம் பழநியாண்டவர் நகர், ஜீவா நகர் வழியாக கண்ணமநாயக்கனுார் கிராமத்துக்கு செல்லும் கிராம இணைப்பு ரோடு உள்ளது. இந்த இணைப்பு ரோட்டை கண்ணமநாயக்கனுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ரோட்டில், பி.ஏ.பி., உடுமலை கால்வாய் குறுக்கிடுகிறது. கால்வாய் மீது நீண்ட காலத்துக்கு முன் கட்டப்பட்ட பாலம் குறுகலாக உள்ளது.தற்போது போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், குறுகலான பாலத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக, வேளாண் விளைபொருட்களை உடுமலை சந்தைக்கு கொண்டு வர, மாற்று வழித்தடத்தை பயன்படுத்த வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கிராம இணைப்பு ரோட்டிலுள்ள பாலத்தை விரிவுபடுத்தினால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். இவ்வழித்தடத்தில் குடியிருப்புகளும் அதிகரித்து வருவதால், ஊரக வளர்ச்சித்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து பாலத்தை விரிவுபடுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ