உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொசு உற்பத்தியாகாமல் இருந்தால் காய்ச்சல் வராது

கொசு உற்பத்தியாகாமல் இருந்தால் காய்ச்சல் வராது

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு - -2 மாணவர்கள் சார்பில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.காலேஜ் ரோடு, ஹவுசிங் யூனிட் பகுதியில் குடியிருப்பு, வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் அஸ்வின்குமார், மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.'வீடுகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், பக்கெட், குடங்களில் தண்ணீர் இருந்தால், மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்வதுடன், வீட்டைச் சுற்றிலும் கிடக்கும் தேங்காய் மூடி, டயர் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.உங்கள் வீடுகளில் கொசு உற்பத்தியாகாமல் இருந்தால், காய்ச்சல் வராது. தேங்கும் தண்ணீரில் எளிதில் கொசு உற்பத்தியாகிவிடும். எனவே, கவனமுடன் இருக்க வேண்டும். காய்ச்சல், கால்வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்,' என்றனர்.மாணவ செயலர்கள் மதுகார்த்திக், ரேவதி, கோதண்டராமன் தலைமையில் மாணவர்கள் வீடு வீடாக சென்று, கொசு மருந்து தெளித்து, துண்டு பிரசுரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி