உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் தடத்தில் மதுவிற்பனை மக்கள் போராட்ட அறிவிப்பு

கோவில் தடத்தில் மதுவிற்பனை மக்கள் போராட்ட அறிவிப்பு

உடுமலை, : கோவில் செல்லும் வழியில், அனைத்து நேரங்களிலும் மது விற்பனை செய்யப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், பழமை வாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. இதில், உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து ரோடு செல்கிறது.அவ்வழித்தடத்தில், அதிகாலை முதலே 'சில்லிங்' முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்கின்றனர். ரோட்டோரத்திலேயே மது விற்பனை செய்யப்படுவதால், அவ்வழியாக செல்ல மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. 'குடி'மகன்களும் ரோட்டிலேயே நின்று கொள்வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.இதனால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், காலி மதுபாட்டில்களையும் வீசிச்செல்வதால், கோவிலுக்கு செல்பவர்கள் பாதிக்கின்றனர். அருகிலேயே குடியிருப்பும் அமைந்துள்ளது. அப்பகுதி மக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குடிமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இது குறித்து, திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபட போவதாக சோமவாரப்பட்டி கிராம மக்கள்தெரிவித்துள்ளனர்.எனவே, இப்பிரச்னையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி