உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய வகுப்பறைகள் திறப்பு

புதிய வகுப்பறைகள் திறப்பு

அவிநாசி:அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கான கழிவறை புதியதாக திறக்கப்பட்டது.இரண்டு வகுப்பறைகள் மற்றும் கழிவறை, நமது அவிநாசி அமைப்பின் சார்பில் 29 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.அவிநாசி சந்தர் மருத்துவமனை டாக்டர் பாலச்சந்தர் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.நமது அவிநாசி அமைப்பின் தலைவர் தாமோதரன் தலைமையில், நிர்வாகிகள் விஷ்ணுகுமார், நாராயணமூர்த்தி, செந்தில்குமார், அமராவதி, விஜயராஜ், கவுன்சிலர் கோபால கிருஷ்ணன், பர்ஹத்துல்லா, முன்னாள் தி.மு.க., நகர செயலாளர் பொன்னுச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை