உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புறம்போக்கு நிலத்துக்கு பட்டா? ஆர்.டி.ஐ.,ல் வெளியான விவகாரம்

புறம்போக்கு நிலத்துக்கு பட்டா? ஆர்.டி.ஐ.,ல் வெளியான விவகாரம்

திருப்பூர் : திருப்பூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்துக்கு தனி நபர் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி, முத்தணம்பாளையம் வருவாய் கிராமத்தில், கே.செட்டிபாளையம் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் பழைய க.ச.எண்: 26பி பிரிவுக்கு உட்பட்ட நிலம் ஒரு ஏக்கர் 7 சென்ட் நிலம் உள்ளது. வருவாய் துறை ஆவணங்களில் இந்த நிலம் காலியிடம், அரசு புறம்போக்கு என்று உள்ளது.இந்நிலையில் இந்த இடத்தில், 3 சென்ட் பரப்பளவில், தனி நபர் ஒருவர் பெயரில், பட்டா எண்: 1327, புதிய புல எண்: 579/4 உள்ளது.இந்த பட்டாவை வருவாய் துறை பதிவேடுகளில், பதிவு செய்ய அந்நபர், வருவாய் துறையினரை அணுகிய போது, ஆவணங்களில் இந்த விவரங்கள் எதுவும் இல்லை என்பதும் அவர் வைத்துள்ளது போன்ற பட்டா வருவாய் துறையால் வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தனர். அதில், நிலம் அரசு புறம்போக்கு என உள்ளது.இதில், நத்தம் வகை மாற்றம் செய்து கணினி சிட்டாவில் பதிவேற்றம் செய்யப்படவில்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 12 ஆண்டுக்கு முன், தனி நபர் இந்த இடத்தை வாங்கி மூன்று மாடியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதன்பின் தற்போதுஇந்த பட்டாவை கொண்டு பதிவு செய்ய அணுகியுள்ளார்.இது குறித்து, வருவாய் துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும். கே.செட்டிபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலம் ஏராளமாக உள்ளது. இவற்றில் உள்ள வீடுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, தெற்கு தாலுகா அலுவலக சர்வேயர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, ''சம்பந்தப்பட்ட இடம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை