உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி மழலையருக்கு பட்டமளிப்பு விழா

பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி மழலையருக்கு பட்டமளிப்பு விழா

திருப்பூர்;அவிநாசி, பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி மழலையர் பிரிவில் யு.கே.ஜி., மழலையருக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார் குத்து விளக்கு ஏற்றினார். அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் பிரகாஷ், பழனியப்பா பள்ளிக்கல்வி இயக்குனர் டாக்டர் சதீஷ் குமார் , எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை உறுப்பினர்கள் அபிநயா பிரகாஷ், நிவேதா சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அவிநாசி கோகுலம் குழந்தைகள் மருத்துவமனை முதல்வர் டாக்டர் சுரேஷ் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். பள்ளி முதல்வர் டாக்டர் அருணாச்சலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி