உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

திருப்பூர்;குடியிருப்பு பகுதியில் மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நந்தவன தோட்டம் பகுதி மக்கள், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை, மனுக்கள் பெட்டியில் போடுகின்றனர்.கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று, மனு அளிக்க, பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். திருப்பூர், விஜயாபுரம், மருதப்பாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர்.திருப்பூர், நந்தவன தோட்டம் பகுதி மக்கள்: திருப்பூர் மாநகராட்சி, 2வது வார்டு, நந்தவனத்தோட்டத்தில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் மொபைல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.பூலுவப்பட்டி ரிங் ரோடு உயர்த்தப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் ஒருமாதம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதியில் மொபைல் போன் டவர் அமைத்தால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும்போது, சரிந்து விழுந்து உயிர்ச்சேத விபத்து அபாயம் உள்ளது. ஆகவே, குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம்: தாராபுரம் தாலுகா, குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, டி.கொமரலிங்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியர் சித்ரா ஆகியோர், மாணவிகளை கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளனர். மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடைபெறாமல் தடுக்க, மாவட்ட அளவில் சிறப்பு குழு அமைத்து, கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை