உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் பூச்சாட்டு விழா

பொங்கல் பூச்சாட்டு விழா

திருப்பூர் : திருப்பூர், பத்மாவதிபுரம் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில், 56வது ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா நேற்று நடந்தது.பொங்கல் விழாவில் நேற்று, ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பொங்கல் விழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்காரத்தில், மாரியம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவில் ஆண்டு விழா

அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளையம் அருகில், முருகம்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுத பாணி கோவில் ஆண்டு விழா நேற்று நடந்தது. மகா அபிேஷகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. தண்டாயுதபாணி சுவாமி, வெள்ளி வேல் மற்றும் வெள்ளி சேவற்கொடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு விழா கமிட்டி சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை