உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு; ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு; ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு

திருப்பூர் : ஆனிமாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 4:00 மணி முதல், அபிஷேகம் துவங்கியது. மூலவர், அதிகார நந்தி, உமாமகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நந்தியெம்பெருமானுக்கு, தாமரை மாலை அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.அதனை தொடர்ந்து, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். 'ஓம் நமசிவாய... சிவாய நம ஓம்' என்ற பக்தர்கள் கோஷத்துடன், கோவில் வெளிபிரகாரத்தை சுற்றிவந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பக்தர்கள், தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்; பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோவில், பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், லட்சுமி நகர் அருணாசலேஸ்வரர் கோவில், எஸ்.வி., காலனி திருநீலகண்டர் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் என, அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !