உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ-சேவை மையத்தில் பிரிண்டர் பழுது

இ-சேவை மையத்தில் பிரிண்டர் பழுது

உடுமலை:உடுமலை தாலுகா அலுவலகத்தில், அரசு கேபிள் நிறுவனம் சார்பில், இ-சேவை மையம் செயல்படுகிறது. தற்போது, பள்ளி, கல்லுாரி மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், அவர்களுக்குத்தேவையான இருப்பிடம், வருமானம், ஜாதிச்சான்றிதழ் கோரி, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.இதற்கு கட்டணமாக, ரூ.60 வசூலிக்கப்படுகிறது. சான்றிதழ்கள் எடுக்கச்செல்லும் மாணவர்களுக்கு பிரிண்டர் பழுது காரணமாக, முழுமையாக தெரியாமல் மோசமான நிலையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.அதிகாரிகள், இம்மையத்திற்கு புதிய பிரிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை