உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்டவிரோத பணப்பரிமாற்றம் எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி

சட்டவிரோத பணப்பரிமாற்றம் எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி

திருப்பூர்:'சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்தால் சிறைக்குச் செல்ல நேரிடும்' என, ரிசர்வ் வங்கி சார்பில், எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பணப்பரிவர்த்தனை அனைத்தும் முற்றிலும் டிஜிட்டல்மயமாகிவிட்ட பின், பல்வேறு மோசடிகளும் நடந்து வருகின்றன. பல்வேறு கவர்ச்சிகர விளம்பரங்கள் வாயிலாக மக்களிடம் இருந்து பணத்தை பெற்று, பின், மோசடி செய்வது, போலி சலுகை அறிவிப்பு, வெளிநாட்டு லாட்டரி பரிசு என்பது போன்ற பல மோசடிகள் நடக்கின்றன; பலரும் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ரிசர்வ் வங்கி சார்பில் அனுப்பப்பட்டு வரும் குறுஞ்செய்தியில், 'சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை கூடாது. கவர்ச்சியான சலுகை அறிவிப்பு வாயிலாக, உங்கள் வங்கிக்கணக்கு வாயிலாக மற்றவர்களிடமிருந்து பணம் பெறுவது அல்லது பணம் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சிறைக்கு செல்ல நேரிடும்' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை