உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாஸ்மாக் கடையை இடம் மாற்றுங்க

டாஸ்மாக் கடையை இடம் மாற்றுங்க

உடுமலை: உடுமலை ஜல்லிபட்டியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், கொங்கலகுறிச்சி கிராம மக்கள் சார்பில், வழங்கப்பட்ட மனு: உடுமலையில் இருந்து அமராவதி, மூணாறு செல்லும் ரோட்டில், ஆலாம்பாளையம் பிரிவு அருகே, 'டாஸ்மாக்' மதுக்கடை எண், 2332 செயல்பட்டு வருகிறது.போக்குவரத்து அதிகமுள்ள ரோட்டையொட்டி செயல்படும் மதுக்கடையால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, விபத்துகளும் ஏற்படுகிறது.கடை செயல்பட துவங்கியதில் இருந்து, இதுவரை அப்பகுதியில் நடந்த சாலை விபத்துகளில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மாலை நேரத்தில், குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவியரும், மதுக்கடையால் பாதிக்கின்றனர். எனவே, இந்த மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ