உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள்

மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள்

பல்லடம், மே 14--பல்லடம் அருகே, மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் துளிர் விட்டு வருகின்றன. பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் -- சுல்தான்பேட்டை வரையிலான நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, நெடுஞ்சாலையின் இரு புறமும் இருந்த எண்ணற்ற மரங்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட மரங்கள், கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள குட்டை ஒன்றில் மறுநடவு செய்யப்பட்டன. இவை நடப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது, மரங்கள் துளிர்விட துவங்கியுள்ளன.ஒருபுறம் மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்படுவதும், தீ வைத்து அழிக்கப்படுவதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வர, இதற்கிடையே, இதுபோன்று மரங்களைக் காக்கும் சம்பவங்களும் நடந்து தான் வருகின்றன.பல்லடம், மே 14--பல்லடம் அருகே, மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் துளிர் விட்டு வருகின்றன.பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் -- சுல்தான்பேட்டை வரையிலான நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, நெடுஞ்சாலையின் இரு புறமும் இருந்த எண்ணற்ற மரங்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட மரங்கள், கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள குட்டை ஒன்றில் மறுநடவு செய்யப்பட்டன. இவை நடப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது, மரங்கள் துளிர்விட துவங்கியுள்ளன.ஒருபுறம் மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்படுவதும், தீ வைத்து அழிக்கப்படுவதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வர, இதற்கிடையே, இதுபோன்று மரங்களைக் காக்கும் சம்பவங்களும் நடந்து தான் வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை