உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்க கோரிக்கை

பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்க கோரிக்கை

உடுமலை;பந்தல் காய்கறி சாகுபடியில், மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.மடத்துக்குளம் வட்டாரத்தில், அமராவதி, பி.ஏ.பி., மற்றும் கிணற்று பாசனத்தில் பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கிணற்று சாகுபடி விவசாயிகள், பந்தல் காய்கறிக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.விளைநிலங்களில், பந்தல் அமைத்து, பீர்க்கன், புடலை, பாகற்காய் சாகுபடி செய்கின்றனர். தற்போது மெட்ராத்தி சுற்றுப்பகுதிகளில், பரவலாக பீர்க்கன் சாகுபடி செய்து, அறுவடை துவங்கியுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்வது அவசியமாகியுள்ளது. கடந்த மாதத்தில், பீர்க்கன், கிலோ 40 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, எவ்வித காரணமும் இல்லாமல், விலை கிலோவுக்கு, 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.அறுவடையின் போது, திடீர் விலை சரிவால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தோட்டக்கலைத்துறை வாயிலாக விவசாயிகள் கூட்டமைப்பு ஏற்படுத்தி, அறுவடை சீசனில், விலை நிர்ணயித்தால், பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி