உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரங்கள் வெட்டி அகற்றம் வருவாய் துறை விசாரணை

மரங்கள் வெட்டி அகற்றம் வருவாய் துறை விசாரணை

திருப்பூர்:ராயபுரம், கல்லம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த வருவாய் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, 37வது வார்டு கல்லம்பாளையத்தில், ஏராளமான மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. இங்குள்ள சமுதாயக் கூடம் அருகில், சிலர் ரோட்டோரம் வளர்ந்திருந்த சில மரங்கள் வெட்டி அகற்றி, லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். இதனால், வடக்கு வருவாய் ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிக்கு சென்று, மரங்கள் வெட்டி ஏற்றப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.வருவாய் ஆய்வாளர் சுப்புராஜ் கூறுகையில், ''புறம்போக்கு மற்றும் பொது இடத்தில் உள்ள மரங்களை எந்த அனுமதியும் இன்றி வெட்டி அகற்றக் கூடாது. இது குறித்து விசாரணை நடத்தி இதில் ஈடுபட்டோர் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்படும்,'' என்றார்.அப்பகுதியினர் கூறுகையில், 'எங்கள் பகுதியில் மரங்கள் வெட்டி அகற்றும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. வருவாய் துறையினர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி இதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். ------------திருப்பூர், கல்லம்பாளையத்தில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை