உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் ஓடிய இரும்பு ரோல்கள்: பல்லடத்தில் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் ஓடிய இரும்பு ரோல்கள்: பல்லடத்தில் போக்குவரத்து பாதிப்பு

பல்லடம்:கோவையிலிருந்து திருச்சி செல்லும் லாரி ஒன்று, தலா, 20 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு ரோல்கள் ஏற்றியபடி, பல்லடம் வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது, கடை வீதி அருகே லாரி திரும்ப முயற்சிக்கையில், பாரம் தாங்காமல் இரும்பு உருளைகள் லாரியிலிருந்து கழன்று சாலையில் உருண்டு ஓடின. லாரியின் இன்ஜின் பகுதி தனியாக முன்னே சென்று நின்றது. பின்பகுதி, விபத்து நடந்த இடத்திலேயே கழன்று நின்றதுடன், லாரியில் இருந்த டீசல் கசிந்தது. இரும்பு ரோல்கள் கீழே விழுந்ததன் காரணமாக, சாலையில் பள்ளம் ஏற்பட்டதுடன், சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டி கடை மற்றும் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்தன. ராட்சத கிரேன் கோவையிலிருந்து வரவழைக்கப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு இரும்பு ரோல்கள் அகற்றப்பட்டன. அதிகாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக, பல்லடத்தில், 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை