உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடியிருப்புகளில் புதர் செடிகள்; மக்கள் நிம்மதியின்றி தவிப்பு

குடியிருப்புகளில் புதர் செடிகள்; மக்கள் நிம்மதியின்றி தவிப்பு

உடுமலை : உடுமலை நகரப்பகுதி குடியிருப்புகளில் இருக்கும் புதர் காடுகளால், மக்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர்.உடுமலை நகரப்பகுதி குடியிருப்புகளில், தனியார் இடங்கள் பலவும் காலி மனைகளாக உள்ளன. இது தவிர ரிசர்வ் இடங்களும் உள்ளன.இவ்வாறு இருக்கும் இடங்கள் முறையான பராமரிப்பில்லாமல் விட்டு விடுவதால், முழுமையாக செடிகள் வளர்ந்தும், சில பகுதிகளில் மரங்களாகவும் பெரிய வனமாகவே மாறியுள்ளது.குடியிருப்புகளுக்கு நடுவே இவ்வாறு இருக்கும் புதர்க்காடுகளால், அப்பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பில்லாமல் அச்சத்தில் உள்ளனர். புதர் காடுகளாக மாறி இருக்கும் இடங்களில், விஷப்பூச்சிகள் தஞ்சம் அடைகின்றன.வீடுகளில் அடிக்கடி இவ்வாறு பூச்சிகள் வருவதால், குழந்தைகளை தனியாக விட்டிற்குள் விடுவதற்கே பெற்றோர் அஞ்சுகின்றனர்.சில குடியிருப்புகளில், ஒவ்வொரு வீட்டிற்கும் உள்ள இடைவெளி அதிகமாக உள்ளது. இத்தகைய இடங்களில் வீட்டிற்கு அருகிலுள்ள புதர் காட்டினால், இரவில் தனியாக வெளியே செல்வதற்கும் மக்கள் பீதி அடைகின்றனர்.இது போன்ற பராமரிப்பில்லாமல் உள்ள மனைகளை சீரமைப்பதற்கு, உரிமையாளர்களை அழைத்து பேசி, முறையான பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை