உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை

செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை

உடுமலை: உடுமலை செல்வ விநாயகர் கோவிலில், ஆடிவெள்ளி சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.உடுமலை ஜி.டி.வி.லே-அவுட் செல்வ விநாயகர் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி துர்க்கை அம்மனுக்கு ராகு கால சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலையில் விக்னேஷ்வர பூஜையுடன் விளக்கு பூஜை துவங்கியது. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி சுவாமிகள் ஆவாஹனம் செய்து, 108 மீனாட்சி போற்றி, லட்சுமி சரஸ்வதி அஸ்டோத்தரம், திருவிளக்கு 108 போற்றி, 51 ஸ்ரீசக்தி பீட அர்ச்சனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது.குங்குமம், மலர்களால் திருவிளக்கு போற்றி பூஜை நடந்தது.தீபாராதனை, மங்கள ஆராத்தியுடன் பூஜை நிறைவு பெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தர்கள், பலவிதமான பக்தி பாடல்களை பாடினர்.மன அமைதி, ஒற்றுமை, உடல்நலம், ஒருமைப்பாட்டிற்கான கூட்டு பிரார்த்தனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை