உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழை நீர் வடிகால் திட்ட குளறுபடி: அதிகாரிகள் அலட்சியத்தால் பாதிப்பு

மழை நீர் வடிகால் திட்ட குளறுபடி: அதிகாரிகள் அலட்சியத்தால் பாதிப்பு

உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் அருகே, மழை நீர் வடிகால் அமைப்பதில் அதிகாரிகளின் திட்ட குளறுபடி காரணமாக, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.உடுமலை பெரியகடை வீதி, உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், நகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.பிரதான ரோட்டில் ஏற்கெனவே, இணைப்பு இல்லாமல், மழை நீர் துண்டிக்கப்பட்ட நிலையில், பெரியகடை வீதியில் கட்டப்பட்ட மழை நீர் வடிகாலையும், பிரதான ரோட்டில் இணைக்கவும், மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில் திட்டமிடப்படவில்லை.இதனால், இரு ரோடுகளிலும் மழை நீர் வடிகால் பணி பாதியில் நிற்பதோடு, கடைகள், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வெளியேற வழியின்றி, மாரியம்மன் கோவில் அருகே தேங்கியுள்ளது.இதனால், கடும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, சாக்கடை கழிவு நீர் ரோடுகளில் வெளியேறி வருகிறது.எனவே, நகராட்சி அதிகாரிகள், மழை நீர் வடிகால்களை இணைக்கவும், கழிவு நீர் முறையாக வெளியேறும் வகையில், வடிகால்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை