உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுவர் இடிந்து விழுந்து முதியவர் படுகாயம்

சுவர் இடிந்து விழுந்து முதியவர் படுகாயம்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 44வது வார்டு, எம்.ஜி.,புதுார், 2வது வீதியில் ஓம்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. வீட்டிலிருந்து வெளியேறும் குளியலறை கழிவு நீர் செல்ல சுற்றுச் சுவர் ஓரத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இதில் முறையாக கழிவு நீர் வெளியேறாமல் நிலத்துக்குள் இறங்கியபடி இருந்துள்ளது. இதனால் சுற்றுச் சுவர் ஈரமாகி ஆபத்தான நிலையில் இருந்தது.நேற்று காலை அருகேயுள்ள காம்பவுண்ட் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மவுனசாமி, 60 என்பவர் நடந்து சென்ற போது, சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து, அவருக்கு காலில் காயமேற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த கவுன்சிலர் கண்ணப்பன் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். சுற்றுச் சுவர் மற்றும் கட்டடத்தை உரிய முறையில் பராமரிக்காமல் ஆபத்தான நிலையில் வைத்திருந்த இரு வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.---இடிந்து விழுந்த வீட்டின் சுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை