உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடு குறித்து பயிற்சி

உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடு குறித்து பயிற்சி

உடுமலை;உடுமலை, குடிமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லுாரி மாணவியர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்தில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இத்திட்டத்தின் கீழ், கோட்டமங்கலம் விவசாயி மோகன்குமார் தோட்டத்தில், விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், குடிமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் மவுனகுருசாமி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்தல், அவற்றின் செயல்பாடுகள், அதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள், இயற்கை விவசாயம், விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்தல், தொழில்நுட்ப உதவிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை