உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சிகளில் நிரப்பப்படாத டேங்க் ஆபரேட்டர் பணியிடம்  ஜல் ஜீவன் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்

ஊராட்சிகளில் நிரப்பப்படாத டேங்க் ஆபரேட்டர் பணியிடம்  ஜல் ஜீவன் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்

திருப்பூர்:கிராம ஊராட்சிகளில், 'டேங்க் ஆபரேட்டர்' பணியிடம் நிரப்பப்படாததால், நீர் வினியோகத்தில் தன்னிறைவு பெற செய்யும், ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநிலத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தனி இணைப்பு வழங்கி, குடிநீர் தேவையில் தன்னிறைவு பெறச் செய்யும் நோக்கில், மத்திய அரசு, ஜல் ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது.ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:இத்திட்டம் வந்த பின், கிராம ஊராட்சி மக்களுக்கு தனிநபர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்த சமயத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து, ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு நீர் வினியோகிக்கப்படும், எந்ததெந்த நேரத்தில், எந்தெந்த வார்டு மக்களுக்கு நீர் திறந்து விட வேண்டும் என்பது போன்ற நீர் வினியோக நடைமுறைகளை, தொடர்ச்சியாக அப்பணியை மேற்கொள்ளும் டேங்க் ஆபரேட்டர்கள்(மின் மோட்டார் இயக்குனர்கள்) தான் தெரிந்து வைத்திருப்பர்.கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின் அப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, தற்காலிக ஊழியர்களால் நீர் வினியோகப்பணி மேற்கொள்ளப்பட்டாலும், பல ஊராட்சிகளில் 'டேங்க் ஆபரேட்டர்' பற்றாக்குறை உள்ளது; ஒரு டேங்க் ஆபரேட்டர் கூட இல்லாத ஊராட்சிகள் கூட உள்ளன. டேங்க் ஆபரேட்டர்களுக்கு, அரசின் சார்பில், 4,850 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக டேங்க் ஆபரேட்டர்களுக்கு, 2,500 முதல், 3,000 ரூபாய் வரை மட்டுமே ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பளம் வழங்குகின்றனர். அப்பணியை மேற்கொள்ள யாரும் முன்வருவதில்லை. ஊராட்சிகளில் டேங்க் ஆபரேட்டர்களின் தேவை முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அவர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை