உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊத்துக்குளி கொங்கு பள்ளி அசத்தல்

ஊத்துக்குளி கொங்கு பள்ளி அசத்தல்

திருப்பூர்;ஊத்துக்குளியில் கொங்கு மெட்ரிக் பள்ளி நடந்து முடிந்த பிளஸ்2 பொதுத் தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.மாணவி சுவாதி, 589 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், ஸ்ரீ ஹரிணி, 586 பெற்று இரண்டாமிடம், சரண்யா, 579 பெற்று, மூன்றாமிடம், சிந்துமதி, 578 பெற்று நான்காமிடம் மற்றும் அன்புச்செல்வன், 575 பெற்று, ஐந்தாமிடம் பெற்றுள்ளனர்.சுவாதி கணக்குப்பதிவியில், பொருளியல் ஆகிய இரண்டிலும், ஸ்ரீ ஹரிணி கணக்குப்பதிவியிலிலும், சரண்யா கணக்குபதிவியில், வணிகவியல் ஆகிய, இரண்டு பாடங்களிலும், நுாறுக்கு, நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் - 8, கணினி பயன்பாடு - 5, வணிகவியல் - 4, பொருளியல் - 5, கணக்குபதிவியல் - 2 என, 24 மாணவர்கள் சென்டம் பெற்றனர்.பள்ளியில், பிரி கே.ஜி., முதல் மற்றும் தமிழ், ஆங்கில வழி கல்வியில், நான்கு குரூப்களில் பிளஸ்1 மாணவர் சேர்க்கை நடக்கிறது. சாதித்த மாணவர்களை பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், தாளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி