உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிவேகத்தில் வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் பணிகள்  

அதிவேகத்தில் வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் பணிகள்  

திருப்பூர்:கோவை - திருப்பூர் வழித்தடத்தில் வஞ்சிபாளையம் ஸ்டேஷனில் புதிய கூட்ஸ்ஷெட் அமைப்பதற்கான பணிகள் சுறுசுறுப்பாக துவங்கியுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, சரக்குகள் ஏற்றி, இறக்கப்படும் வாய்ப்புள்ளது.வட மாநிலங்களில் இருந்து கோதுமை, சோயா, புண்ணாக்கு, அரிசி, கோழித்தீவனம் உள்ளிட்டவை வந்திறங்குவதால் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ஷெட் எப்போதுமே 'பிஸி'யாக இருக்கும். நகரின் மையப்பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ஷெட் இருப்பதால், அதிக பாரத்துடன் புறப்படும் லாரிகள் போக்குவரத்து நெரிசலில் இருந்து வெளியேறவே, ஒரு மணி நேரமாகிறது. ஒரே நேரத்தில் அதிக சரக்கு புக்கிங் வரும் போது, சரக்கு ரயில் நிறுத்த இடமில்லாமல், ஈரோடு அல்லது கோவையில் ரயிலை நிறுத்தி, அங்கிருந்து லாரிகள் மூலம் சரக்குகளை இடமாற்ற வேண்டியுள்ளது.ஐந்து ஆண்டுகள் முன் வஞ்சிபாளையம் ஸ்டேஷன் புதிய கூட்ஸ்ெஷட்டுக்கு இடமாக தேர்வு செய்யப்பட்ட போதும், நிர்வாக ரீதியான பணி துவங்காமல் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டது. மே துவக்கம் முதல் வஞ்சிபாளையம் கூட்ஸ்ெஷட்டுக்கென பிரத்யேக டிராக் மற்றும் பிளாட்பார்ம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பொறியியல், தொழில்நுட்ப பிரிவினர் புதிய தண்டவாளம் பதிப்பு, சிக்னல், மின் இணைப்பு பணிகளை துவக்கியுள்ளனர்.----வஞ்சிபாளையத்தில் கூட்ஸ்ெஷட் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கான 'டிராக்' அமைக்கப்பட்டு வருகிறது.'டிராக்' அமைக்கும் பணி ஆய்வு செய்யப்படுகிறது.

இந்தாண்டுக்குள் செயல்பாடு

ரயில்வே அலுவலர்கள் கூறியதாவது:கூட்ஸ்ஷெட் அமைக்க போதிய இடவசதியுடன் வஞ்சிபாளையம் ஸ்டேஷன் உள்ளது. இரண்டு மெயின்லைன் தவிர, கூடுதலாக நான்கு டிராக் அமைக்க இடமுள்ளது. தற்போதைக்கு, இரண்டு டிராக் (ஈரோடு - கோவை மார்க்கம்) அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.அவிநாசி - மங்கலம் - பல்லடம் சாலையில் வஞ்சிபாளையம் ஸ்டேஷன் அமைந்துள்ளதால், இங்கு கூட்ஸ்ஷெட் அமைத்தால், லோடு இறக்கும் லாரிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்பதால், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.பொருட்களை இருப்பு வைப்பதற்கான அறைகள், புக்கிங் அலுவலகம் கட்டும் பணி விரைவில் துவங்கும். ரயில்வே உயர்மட்ட பாலத்துக்குள் கீழ் ஸ்டேஷன் உள்ளதால், கனரக வாகனங்கள் வந்து செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டியுள்ளது. அதற்கான வழித்தடங்கள் குறித்தும் ஆராயப்படும்.ஜூலை இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பாதுகாப்பு குழு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டுக்குள் வஞ்சிபாளையத்தில் சரக்கு ரயில்கள் நின்று, சரக்குகளை ஏற்றி, இறக்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை