உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

அவிநாசி : புதுப்பாளையம் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் ஒரு பகுதியை பிரித்து திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.தற்போது புதுப்பாளையம் ஊராட்சியில் கிடைக்கும் கிராம அடிப்படை வசதிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், கிராமப்புற ஊராட்சியாக இருப்பதால் மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெறுகின்றனர்.மேலும் பத்திரப்பதிவு அலுவலகம், கலைக்கல்லுாரி, கோர்ட் என அனைத்தும் அவிநாசியை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.தற்போது திருப்பூர் மாநகராட்சியுடன் இணைத்தால் புதுப்பாளையம் ஊராட்சி கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது உறுதி.எனவே புதுப்பாளையம் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடுமாறும், புதுப்பாளையம் ஊராட்சியை கிராம ஊராட்சியாக தொடர வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை