உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிகள் வேகம் கூடுமா?

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிகள் வேகம் கூடுமா?

அவிநாசி;அவிநாசி வட்டம், கணியாம்பூண்டியில், தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பின் 7ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இந்த அமைப்பில், பழைய கார்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் 15,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை ஏற்றார். தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில தலைவர் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசாக கடிகாரம் மற்றும் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் காப்பீடுகள் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், விரைவில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஆர்.சி., புத்தகம் தபால் துறை மூலம் அனுப்புவதால் வியாபாரிகள் பாதிப்படைகின்றனர். எளிய முறையில் வியாபாரிகளுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி