உடுமலை:பருவமழைகள் பொய்த்து, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், உடுமலை பகுதியிலுள்ள ஏழு குளங்களில் திருப்தியான நீர் இருப்பு உள்ளது.திருமூர்த்தி அணையிலிருந்து, தளி கால்வாய் வாயிலாக, ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், நீர் பங்கீட்டு அடிப்படையில், ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது.ஏழு குளங்களில், பெரியகுளம், 404 ஏக்கர் பரப்பளவும், 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். நேற்று காலை நிலவரப்படி, இக்குளத்தில், 8.30 அடி நீர்மட்டமும், 49.20 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.செங்குளம், 74.84 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர் மட்ட உயரமும், 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டது. இதில், 5.90 அடி நீர்மட்டமும், 6.30 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.ஒட்டுக்குளம், 90 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர் மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். இங்கு, 6.70 அடி நீர்மட்டமுமம், 8.28 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.செட்டிகுளம், 67.49 ஏக்கர் பரப்பளவில், 7.5 நீர் மட்ட உயரம், 7.93 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இக்குளத்தில், 4.90 அடி நீர்மட்டமும், 4.34 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.தினைக்குளம், 51.19 ஏக்கர் பரப்பளவில், 9.25 அடி நீர்மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கனஅடியாகும். 6.40 அடி நீர்மட்டமும், 5.42 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.கரிசல் குளம், 31.22 ஏக்கர் பரப்பளவு, 7.65 அடி நீர்மட்டம், 2.92 மில்லியன் கனஅடி நீர் இருப்பு கொண்டது. இங்கு, 6.50 அடி நீர் மட்டமும், 2.30 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.அம்மாபட்டி குளம், 31.22 ஏக்கர் பரப்பளவில், 4.50 அடி நீர்மட்டம், 1.76 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். 3.70 அடி நீர்மட்டமும், 1.64 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.வலையபாளையம் குளம், 52.80 ஏக்கர் பரப்பளவில், 10.33 அடி நீர் மட்டமும், நீர் கொள்ளளவு, 7.63 மில்லியன் கனஅடி உள்ளது. இங்கு, 7 அடி நீர் மட்டமும், 5.28 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., திட்டத்தில், ஏழு குளம் பாசனத்துக்கு நீர் ஒதுக்கீடு பெற்று இருப்பு வைத்துள்ளதால், விவசாயத்துக்கு கைகொடுக்கிறது. இதனால், பாசன பகுதிகள் செழிப்பாக உள்ளன,' என்றார்.
நீர் இருப்பு திருப்தி!
ஏழு குளங்களில், அம்மாபட்டி குளத்தில், 93.18 சதவீதம் நீர் இருப்பும், கரிசல் குளத்தில், 78.76 சதவீதம் நீர் இருப்பும் உள்ளது. ஒட்டுக்குளம் - 58.68, பெரியகுளம் - 69.72, செட்டிகுளம் - 54.72, தினைக்குளம் - 74.96, வலையபாளையம் - 67.77 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. செங்குளம் - 49.45, செட்டிகுளம் - 31.52 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், உடுமலை பகுதியிலுள்ள குளங்களில், திருப்தியான நீர் இருப்பு உள்ளது. குளத்துபாசனத்தில், கரும்பு, தென்னை, காய்கறி பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படும் நிலையில், பயிர்களுக்கும் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. இதனால், உடுமலை ஏழு குளம் பாசன பகுதியில் பசுமையான சூழல் உள்ளது.