உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண் கொலை 2 வாலிபர் கைது

பெண் கொலை 2 வாலிபர் கைது

பல்லடம் : கடலுாரை சேர்ந்த அருண் ஸ்டாலின் விஜய் மனைவி பிரின்ஸி, 24. வீரபாண்டி - வித்யாலயம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரை சேர்ந்தவர் திவாகர், 31. பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஏற்கனவே திருமணமான இவருக்கும், பிரின்ஸிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது.இதனை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என நினைத்த திவாகர், தனது நண்பன், இந்திரகுமார், 33 என்பவருடன் சேர்ந்து பிரின்ஸியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பெண் உடலுடன் திண்டுக்கல் நோக்கி சென்றபோது, போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை