| ADDED : ஆக 11, 2024 12:21 AM
திருப்பூர்;திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டரில், இன்று (11ம் தேதி) மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில், மகளிர் நல டாக்டர்கள் கீதாஞ்சலி மற்றும் குமாரி அனுகிரதி பங்கேற்று, மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.முகாமில், 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரத்த, சிறுநீரகப்பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை இலவசம்.பரிந்துரை செய்யப்படும் பிற பரிசோதனைகளுக்கு, 30 முதல், 50 சதவீதம் வரை கட்டண சலுகைகளும், சிகிச்சை அறுவை சிகிச்சைகளுக்கு, 30 சதவீதம் வரை கட்டண சலுகைகளும் வழங்கப்படும். இம்முகாமில் பங்கேற்க வருவோர், 300 ரூபாய் பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.'திருப்பூரில் தேசிய தரச் சான்றிதழை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரேவதி மெடிக்கல் சென்டர், மகளிர் நல மருத்துவப்பிரிவில் இரண்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு, சர்வதேச தரத்தில் செயல்பட்டு வருகிறது.மேலும் கர்ப்பிணிகளுக்கான துளிர் பிரசவ திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.மகளிர் நல சிறப்பு மருத்துவ முகாமில் அனைத்து பெண்களும் பங்கேற்று, பயன்பெறும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்,' என, ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.