உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூஜ்ய நிலை சுத்திகரிப்பு...நாடு முழுக்க அமல்படுத்த யோசனை!

பூஜ்ய நிலை சுத்திகரிப்பு...நாடு முழுக்க அமல்படுத்த யோசனை!

திருப்பூர்;'நாட்டில் உள்ள அனைத்து சாயமேற்றும் தொழிற்சாலைகளும், பூஜ்ய நிலை சுத்திகரிப்பில் கவனம் செலுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடன், சுற்றுச்சூழல் கல்வி மையம் இணைந்து, ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்கான முக்கியமான பணியில், மறுசுழற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இதை உணர்த்தும் வகையிலும், ஜவுளிக்கழிவுகளை மறு சுழற்சி செய்யும் பணிகளை மேம்பாடு செய்தல், அதன் விதிமுறைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதற்கான நிதியுதவி குறித்த கலந்துரையாடல் கருத்தரங்கம் நடந்தது.சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் மூத்த திட்ட இயக்குனர் துஷார் ஜானி, வரவேற்றார். ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி பேசியதாவது: வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாடுகளை திருப்பூர் தொழில் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பூஜ்ய நிலை சுத்திகரிப்பில், தினமும், 13 கோடி லிட்டர் நீர் மறு சுழற்சி செய்து, மறுபயன்பாடு செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 55 சதவீதம். பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பிற இடங்களில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு இல்லை. எனவே, சுற்றுச்சூழல் கல்வி மையம், நாட்டில் உள்ள அனைத்து சாயமேற்றும் தொழிற்சாலைகளும், பூஜ்ய நிலை சுத்திகரிப்பில் கவனம் செலுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.சங்க துணைத் தலைவர் இளங்கோவன், வணிக மேம்பாடு, பிரிண்டிங் மற்றும் நிலைத்தன்மை துணைக்குழு துணைத் தலைவர் மேழிசெல்வன், சங்கத்தின் வளம் குனறா வளர்ச்சி ஆலோசகர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ