உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  2,279 பேருக்கு ரூ.33.10 கோடி தாட்கோ வாயிலாக கடனுதவி

 2,279 பேருக்கு ரூ.33.10 கோடி தாட்கோ வாயிலாக கடனுதவி

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், 'தாட்கோ' சார்பில், கடந்த 2021 முதல், இதுவரை, 33.10 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது: 'தாட்கோ' சார்பில், போட்டோ ஸ்டுடியோ, மொபைல் விற்பனை மற்றும் பழுது நீக்க, கற்பூரம் தயாரிப்பு, இலவம் பஞ்சு தொழில், எலக்ட்ரிக் கடை, தையல், உணவகம், மளிகை கடை, ஆடை உற்பத்தி, பாத்திரம் உற்பத்தி உள்பட பல்வேறுவகை தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தில், கடந்த 2021 முதல் இதுவரை, 2,279 பயனாளிகளுக்கு, மொத்தம் 33.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மானியத்துடன் தொழில் துவங்க கடன் வழங்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் மக்களை ஒருங்கிணைத்து, பத்திரப்பதிவு அலுவலகம் வாயிலாக, 6 சங்கங்கள் உருவாக்கப்பட்டு, 119 பேருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டு, தொழில் முன்னேற்றமடைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துாய்மை பணியாளர் நலவாரியம் வாயிலாக, 900 பேருக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள துாய்மை பணியாளர் 51 பேருக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கு, 6 ஏக்கர் விவசாய நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை