உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வற்றாத கிணறு... வளமாக பயன்படுத்தலாமே!

வற்றாத கிணறு... வளமாக பயன்படுத்தலாமே!

அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகே 15 வேலம்பாளையம் ஊராட்சியாக இருந்தது. பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்ந்து தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.வேலம்பாளையம் ஊராட்சியாக இருந்தபோது, அனுப்பர்பாளையம் ஜீவா வீதியில், 1964ம் ஆண்டு கிணறு அமைத்து, மேல்நிலை தொட்டி மூலம் அப்பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்துள்ளனர்.இந்த தொட்டியை அப்போதைய தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன், திறந்து வைத்துள்ளார். கிணறு அமைத்து 60 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அப்பகுதியை சுற்றி உள்ள 15 வீதிகளுக்கு இந்த தண்ணீர் ஆதாரமாக இருந்து வருகிறது.ஆனால், கிணறு மற்றும் மேல்நிலை தொட்டியை மாநகராட்சி சார்பில், போதிய பராமரிப்பு செய்யப்படாததால், அப்பகுதி முழுவதும் மரங்கள் முளைத்து, முட்புதர் மண்டி உள்ளது.கிணற்றுக்குள்ளும் மரங்கள் முளைத்து, மாசு பட்டு வருகிறது. இந்த கிணற்றில் எப்போதும் தண்ணீர் வற்றியது இல்லை. மாநகராட்சி ஊழியர்கள் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர்.முட்முதர்களை அகற்றி, கிணற்றை சுத்தமாக வைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி