உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கும்பாபிஷேகம்: ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

அவிநாசி கும்பாபிஷேகம்: ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

அவிநாசி;அவிநாசி கோவில் கும்பாபிேஷக விழாவில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, டி.ஐ.ஜி. தெரிவித்தார்.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக தினத்தன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பிடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதி ஆகியவற்றை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி., சரவணசுந்தர் மற்றும் திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோர் நேற்று கோவிலில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், அறங்காவலர் பொன்னுசாமி, செயல் அலுவலர் மருது பாண்டியன் ஆகியோரிடம் கும்பாபிஷேக பணிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் கேட்டறிந்தனர்.தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக கோவிலுக்குள் நுழையும் வழி மற்றும் வெளியேறும் வழி என ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவில் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகள், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவற்றை அகற்றவும் அறிவுறுத்தினார்.'அவிநாசி கோவில் கும்பாபிேஷக விழாவில், கோவை, ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்,' என்று டி.ஐ.ஜி., கூறினார். போக்குவரத்து மாற்றங்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவிநாசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், டி.ஐ.ஜி.,க்கு விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை