உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் விளையாட்டு விழா: யோகா குறித்து விழிப்புணர்வு

பள்ளியில் விளையாட்டு விழா: யோகா குறித்து விழிப்புணர்வு

உடுமலை:உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.விழாவில் உடற்கல்வி இயக்குனர் அன்பரசு வரவேற்றார். உடுமலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கல்யாணி ஒலிம்பிக் தீபம் ஏற்றியும், யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விழாவை துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் பூரணி முன்னிலை வகித்தார். பள்ளிச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி விளையாட்டு விழாவையொட்டி நடந்த போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர், கல்விக்கழக உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் வான்மதி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை