உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரதியார் பல்கலை கல்லுாரி; மகளிர் கிரிக்கெட் கோவை ராமகிருஷ்ணா அணி முதலிடம்

பாரதியார் பல்கலை கல்லுாரி; மகளிர் கிரிக்கெட் கோவை ராமகிருஷ்ணா அணி முதலிடம்

உடுமலை;உடுமலையில் நடந்த பாரதியார் பல்கலை கல்லுாரி மகளிர் கிரிக்கெட் போட்டியில், கோவை ராமகிருஷ்ணா கல்லுாரி அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது.பாரதியார் பல்கலை கல்லுாரி அணிகள் இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி, உடுமலை அரசு கலைக் கல்லுாரியில் நடந்தது. போட்டியில், எட்டு அணிகள் பங்கேற்றன. போட்டியை, கல்லுாரி முதல்வர் கல்யாணி, துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் முன்னாள் தமிழக ரஞ்சி கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம், தனியார் நிறுவன உரிமையாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

போட்டி முடிவுகள்:

உடுமலை அரசு கலை கல்லுாரி அணியும், ஈரோடு வெள்ளாளர் கல்லுாரி அணியும் மோதியதில், வெள்ளாளர் கல்லுாரி வென்றது. அடுத்து, கோவை சி.எம்.எஸ்., கல்லுாரி அணி, கோபி கலை கல்லுாரி அணியுடன் மோதி வெற்றது.இதேபோல, கோவை ராமகிருஷ்ணா கல்லுாரி அணியும், ஈரோடு வி.இ.டி., அணியும் மோதியது. இதில், ராமகிருஷ்ணா அணி வெற்றி பெற்றது. தவிர, மற்றொரு போட்டியில், பாரதியார் பல்கலை அணி வெற்றி பெற்றது.அவ்வகையில், தொடர்ந்து நடந்த லீக் போட்டியில், கோவை ராமகிருஷ்ணா கல்லுாரி அணி முதலிடம், கோவை பாரதியார் பல்கலை அணி 2ம் இடம், ஈரோடு வெள்ளாளர் கல்லுாரி 3ம் இடம், கோவை சி.எம்.எஸ்., கல்லுாரி 4ம் இடம் பெற்றன.பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் மாநில கிரிக்கெட் வீரர்கள் சுகுமார், சிவதாஸ், இன்னர்வீல் கிளப் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.போட்டி ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முனைவர். கே. பி ராமகிருஷ்ணன், உடுமலை கிரிக்கெட் பயிற்சியாளர் பிரபாகரன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் மனோகர் செந்துார்பாண்டி ஆகியோர் செய்திருந்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை