உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வாஜ்பாய் பிறந்த நாள் விழா பா.ஜ.வினர் அன்னதானம்

 வாஜ்பாய் பிறந்த நாள் விழா பா.ஜ.வினர் அன்னதானம்

திருப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ.,வினர், அய்யப்ப சுவாமி கோவிலில் அன்னதானம் வழங்கினர். வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், சின்னசாமி மற்றும் பூபதி பாபு உட்பட பலர் பங்கேற்றனர். பா.ஜ. செரங்காடு மண்டலம் சார்பில், காங்கயம் ரோடு, புதுார் ரோட்டில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காட்டுவளவில், மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், தெற்கு சட்டசபை தொகுதி அமைப்பாளர் மணி, இணை அமைப்பாளர் தங்கராஜ், மண்டல தலைவர் மந்திராச்சலமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். மங்கலம் ரோடு, தாடிக்கார முக்கு பகுதியில், கருவம்பாளையம் மண்டல் பா.ஜ. சார்பில் விழா நடந்தது. மண்டல் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல், 43வது வார்டு தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். -திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ. சார்பில், பெருமாநல்லுார் நால் ரோட்டில், வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மண்டல தலைவர் முத்து குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி